• Call us: 73391 37518
  • slcs@slcs.edu.in

SLCS

தினமலர்

மற்றும்

சுப்பலெக்ஷ்மி லெக்ஷ்மிபதி அறிவியல் கல்லூரி, மதுரை

 இணைந்து வழங்கும்

ஸ்டூடண்ட் ஜர்னலிஸ்ட் & மாணவ இயக்குநர்

  செய்தி மற்றும் ஆவணப்பட பயிற்சி முகாம்  & இரண்டு நாட்கள் குறும்படத் தயாரிப்பு பயிற்சி முகாம்

 (மே 1-2)  (மே 06-07) 

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்கள், ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்சித் தயாரிப்பு நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான விளம்பரம் தயாரிக்கும் நிறுவனங்கள், திரைப்படத் துறை,  500 க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் மற்றும் 20,000 பத்திரிக்கை ஊடகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன
இதற்காக ஆண்டொண்றிற்கு ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர்
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையானது மிக வேகமாக வளர்ந்து வரும் மிக பிரகாசமான எதிர்காலம் கொண்ட துறையாக உள்ளது. ஒவ்வொறு ஆண்டும் இத் துறையின் வளர்ச்சியானது 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. இத்துறையில் படித்த இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் பெறுகி வருகின்றன.
மீடியா துறைகளான சினிமா, தொலைக்காட்சி, பத்திரிக்கை, வானொலி போன்றவற்றில் ஜொலிக்க விரும்பும் +2 மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க ’தினமலர்’ விரும்புகிறது. உண்மையின் உரை கல்லாகத் திகழும் தினமலர் எப்போதும் சமூக நலனிலும், சமுதாய வளர்ச்சியிலும் அக்கறை காட்டி வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த வகையில் தினமலர் நிறுவனம், மதுரை, சுப்பலெக்ஷ்மி லெக்ஷ்மிபதி அறிவியல் கல்லூரியுடன் இணைந்து ”மாணவ இயக்குநர்” எனும் ஒரு புதுமையான பயிற்சிப் பட்டறைய +2 மாணவ, மாணவிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி அதிலும் வெற்றி கண்டது. தமிழகத்திலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
ஆறாவது முறையாக நடக்கவுள்ள இந்த குறும்படத் தயாரிப்புப் பயிற்சியினை இவ்வாண்டு மே 06-07 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரமான செய்திகளை இந்த சமூதாயத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கத்தில் சிறந்த இளைய தலைமுறை பத்திரிகையாளர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு இரண்டாவது முறையாக ஸ்டூடண்ட் ஜர்னலிஸ்ட் எனும் செய்தி மற்றும் ஆவணப்பட பயிற்சி முகாமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி முகாமானது மே 1-2 ம் தேதிகளில் நடைபெறும்.
பயிற்சிக்கு தேவையான பொருள்கள், தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படும்.
நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமிரா, மற்றும் எடிட்டிங் உபகரணங்களோடு, திரைக்கதை, வசனம், இயக்குதல், செய்தி சேகரிப்பு, ஆவணப்படத் தயாரிப்பு ஆகிய அடிப்படைப் பயிற்சிகள் ஆகியவை இந்த பயிற்சி முகாம்களில் வழங்கப்படும்
பயிற்சிக்குப் பின்னர் மாணவ மாணவியருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
தற்போது +2 முடித்ததற்கான சான்றாக பள்ளி அடையாள அட்டையின் நகல் (அல்லது) பள்ளி முதல்வரின் சான்று (அல்லது) +2 தேர்வின் ஹால் டிக்கட்டின் நகலை பயிற்சிக்கு வரும்போது எடுத்து வரவேண்டும்
பயிற்சிக்கு வரும்போது ரூ 200/- பயிற்சிக்கட்டணமாக செலுத்த வேண்டும்

TVP_ADDMISSION_BANNER

மாணவ இயக்குநர் 2019

Registration Form